தமது பேட்டியின்போது ஓரிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர் என்று தெரிவித்தார்

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டெல்லி வன்முறைகள் குறித்த கேள்விக்கு அது பற்றி இந்தியாதான் முடிவு செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.


அவர் தமது பேட்டியின்போது ஓரிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி மிகுந்த மத நம்பிக்கையுள்ள தலைவர் என்று தெரிவித்தார்.


மத சுதந்திரம் குறித்து தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேசியதாகவும் அவர் கூறினார்.


அது குறித்து அவர்கள் கடுமையாக முயற்சி எடுத்து வருவதாக குறிப்பிட்ட அவர், "தனிப்பட்ட வன்முறை சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டேன். ஆனால், அது குறித்து இந்தியாவுடன் நான் பேசவில்லை. அது இந்தியா தொடர்புடையது, அது குறித்து இந்தியாவே முடிவெடுக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேசியதாகவும், அது தொடர்பாக சீனா கடுமையாக முயற்சிகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


காஷ்மீர் பிரச்சனை பல முனைகளிலும் முள்ளாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாம் இதில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.