ஈக்குவேடாரில் மருத்துவமனைகளும் மிகக் குறைவு. அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தேவையான படுக்கையோ, வென்டிலேட்டர்களோ அங்கு இல்லை. இதனால், போதுமான சிகிச்சை கிடைக்காமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
மேலும், உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு போதுமான இடம் இல்லாததால், உயிரிழந்தவர்களின் சடலங்களை அவரது உறவினர்கள் சாலைகளில் விட்டுச் செல்லும் அவலம் நிலவுகிறது.
'மருத்துவமனைகளிலும் இடம் இல்லாததால் வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே உள்ளனர். அப்படி வீட்டில் இருப்பவர்கள் பலர் உயிரிழக்கின்றனர். இறந்தவர்களின் உடலைப் புதைப்பதற்காக அதிகாரிகளை அழைத்தால், 'காத்திருங்கள்' என்கின்றனர். சடலத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு நாட்கள் இருக்க முடியும். உயிரிழந்தவர்களால் வீட்டில் இருக்கும் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், சடலங்களை சாலைகளில் விட்டுச் செல்கின்றனர்' என, ஈக்குவேடார் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஈக்குவேடாரின் குயாகுவிலின் நகர மேயர் சிந்தியா விட்டேரி, ''இதுவரை இறந்தவர்களின் உடல் துறைமுக நகரில் உள்ள தனியார் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஒரு நாளுக்கு 100க்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட சடலங்கள் வருகின்றன. கல்லறைகள் உருவாக்கப்படும் வரை இறந்தவர்களின் உடல்கள் 12 மீ., நீள அகலத்தில், 40 அடி உயரம் கொண்ட பெரும் குளிர் கலனுக்குள் வைக்க திட்டமிட்டுள்ளோம்' எனக் கூறியுள்ளார்.